Homeசெய்திகள்விளையாட்டுஜூனியர்  இந்திய மகளிர் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!

ஜூனியர்  இந்திய மகளிர் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!

-

- Advertisement -

ஜூனியர் மகளிர் டி-20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, பிசிசிஐ ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

மலேசியாவில் நடைபெற்ற ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி, இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி, ஐசிசி தலைவர் ஜெய்ஷா, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆசிய விளையாட்டு- இந்திய அணி பங்கேற்கும் என அறிவிப்பு!
Photo: BCCI

இந்த நிலையில், 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ பாராட்டு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையும் அறிவித்துள்ளது. அதன்படி ஜூனியர் மகளிர் அணி வீராங்கனைகள் மற்றும் தலைமை பயிற்சியாளர் நூசின் அல் காதீர் தலைமையிலான பயிற்சியாளர் குழுவினருக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

MUST READ