Homeசெய்திகள்விளையாட்டுதப்பிரைஸ் சம்ஸி சுழலில் சுருண்ட ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிக்கு 57 ரன்கள் இலக்கு!

தப்பிரைஸ் சம்ஸி சுழலில் சுருண்ட ஆப்கானிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிக்கு 57 ரன்கள் இலக்கு!

-

டி20 உலகக் கோப்பை முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி முதலாவது பேட்டிங்கில் 11.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றானது சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது சூப்பர் 8 சுற்று முடிவடைந்து இன்று முதலாவது அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியானது மேற்கிந்திய தீவுகளில் பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் (இந்திய நேரப்படி) இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசியது. ஆப்கானிஸ்தான் அணியில் அஸ்மத்துல்லா ஒமர்சாய் மட்டும் 10 ரன்கள் எடுத்தார். மற்ற வீர்ர்கள் ஒற்றை இலக்கை கூட தாண்டவில்லை. இறுதியில் அணியானது 11.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சு தரப்பில் தப்பிரைஸ் சம்ஸி 3 விக்கெட்டுகளையும் மார்கொ யான்சென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். பின்னர் 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது பேட்டிங் விளையாடவுள்ளது.

MUST READ