சோகம் துரத்துகிறது ஹர்திக் பாண்டியாவை, ஒன்றன் பின் ஒன்று கைவிட்டு போனது
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமித்துள்ளது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை விட சூர்யகுமார் யாதவை வீரர்கள் அதிகம் நம்புகிறார்கள் என்பதன் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
சூர்யகுமார்(33), பல்லேகலேயில் நடைபெறவிருக்கும் 15 வீரர்கள் கொண்ட மூன்று டி20 போட்டிகளுக்கான அணியை தலைமை தாங்குவார். இருப்பினும், அடுத்து வரும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பி்த்தக்கது.
முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு
ஹர்திக் பாண்டியாவுக்கு இது கடுமையான நேரமாக உள்ளது. ஒருபுறம் தொழில் முறையாக டி20 கேப்டன்சி மாற்றப்பட்ட நிலையில் மறுபுறம் தனிப்பட்ட வாழ்க்கையில் விவாகரத்து நடந்துள்ளது. முன்னதாக ஐபிஎல் -இல் MI கேப்டனாக பொறுப்பேற்ற அவர் அதிகமாக பேசப்பட்டார். அவை அனைத்தும் டி20 உலக கோப்பை வெற்றிக்குப் பிறகு பாராட்டுகளாக மாறியது. ஆனால் இப்போது மீண்டும் BAD TIME அவரை விடாமல் துரத்துகிறது.