மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
9வது ஆசியக்கோப்பை மகளிட் டி20 தொடரானது இலங்கையின் தம்புல்லாவில் நடைபெற்றது. இந்த தொடரில் நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றன. இதில் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மர்ன்பிரீத் பவுர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து இந்திய முதலாவது பேட்டிங் விளையாடியது. அணியின் அதிகபட்சமாக ஸ்மிரிதி மந்தனா 60 ரன்களும், ரிச்சா கோஷ் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 165 ரன்கள் எடுத்தது.
பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. அணியின் அதிகபட்சமாக சமாரி அட்டப்பட்டு 61 ரன்களும் ஹர்சிதா 69 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு வித்திட்டனர். இறுதியில் அணியானது 18.4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழந்து 167 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டியில் 5 முறை இந்திய அணியிடம் தோல்வியடைந்ததை இப்போட்டியில் மூலம் பழிதீர்த்து முதலாவதாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது.