Homeசெய்திகள்விளையாட்டுஇலங்கைVsஇந்தியா அணிகளுக்கிடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தொடக்கம்

இலங்கைVsஇந்தியா அணிகளுக்கிடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தொடக்கம்

-

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டி இன்று பல்லகெலேவில் இன்று நடைபெறுகிறது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இலங்கைக்கு சென்றுள்ளது. இதில் இந்திய அணியானது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலமையிலும் களம் காண்கின்றன. இதில் முதலாவது டி20 போட்டியானது பல்லகெலேவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி டி20 போட்டிகளில் ஆடும் முதலாவது ஆட்டம் இதுவாகும். இதனால் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ரிங்கு சிங், ரிஷப் பந்த், ரியான் பராக், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ். ஆகியோர் விளையாடவுள்ளனர்.

 

MUST READ