உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் அதிரடி வெற்றியைப் பதிவுச் செய்த தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி வரலாற்று வெற்றியைப் பதிவுச் செய்துள்ளது.
‘லியோ’ படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்க நடிகர் விஜய்க்கு கடிதம்!
தர்மசாலாவில் மழை பெய்ததால், 43 ஓவர்களாகப் போட்டி குறைக்கப்பட்டது. டாஸ் வென்று பந்து வீசிய தென்னாப்பிரிக்க வீரர்கள் தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீசினர். நெதர்லாந்து அணிக்கு விக்கெட் சரிவு, ரன் குறைந்த போதும், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் நிதானமாக விளையாடினார்.
குறிப்பாக, 112 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த அணியை கடைசி நேரத்தில் மீட்ட எட்வர்ட்ஸ்- வாண்டர் மெர்வே இணை, அதிரடியாக விளையாடி சரிவில் இருந்து மீட்டனர். இதன் மூலம் 43 ஓவர்களில் 245 ரன்களைக் குவித்தது.
246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 44 ரன்களுக்கு 4 பேட்ஸ்மேன்களை இழந்துப் போராடியது. அடுத்து வந்த வீரர்கள் ஒன்று இரண்டு பவுண்டரிகளை விரட்டிவிட்டு, அதே வேகத்தில் பெவிலியில் திரும்புவதுமாக இருந்தனர்.
2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்கு வந்த மூதாட்டி!
எனினும், இன்னிங்ஸைக் கட்டமைக்கும் முயற்சியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர், 43 ரன்களில் ஆட்டமிழந்ததால் தென்னாப்பிரிக்காவின் தோல்வி உறுதியானது. முடிவில் 38 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இதுவரையிலான உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு, இது மூன்றாவது வெற்றி ஆகும். டெஸ்ட் அந்தஸ்த்தைப் பெற்ற அணிக்கு எதிரான முதல் உலகக்கோப்பை வெற்றியாகவும் சாதனை படைத்துள்ளது.