Homeசெய்திகள்விளையாட்டுஇலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் சர்மா சாதனை!

இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் சர்மா சாதனை!

-

- Advertisement -

 

இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் சர்மா சாதனை!
Photo: ICC

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்து, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சாதனைப் படைத்துள்ளார்.

“ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு எவ்வளவு செலவானது?”- மத்திய அரசு விளக்கம்!

ஆசியக்கோப்பைக் கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடி வருகிறது. இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில், இந்திய அணி 47 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்களை எடுத்த போது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோஹித் சர்மா, 10,000 ரன்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.

அரசு விடுதியில் ராகிங்- ஆடைகளை கழற்றும்படி கூறி கொடுமை

இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், தோனி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோருக்கு அடுத்தப்படியாக, ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்து ரோஹித் சர்மா சாதனைப் படைத்துள்ளார். மேலும், தனது 51வது அரை சதங்களையும் ரோஹித் சர்மா, இந்த போட்டியில் பதிவுச் செய்தார்.

அரசு விடுதியில் ராகிங்- ஆடைகளை கழற்றும்படி கூறி கொடுமை

நேபாளம் மற்றும் பாகிஸ்தானைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடி, ரோஹித் சர்மா அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ