
இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்காகவே, தங்கள் திறமைகளைச் சேமித்து வைத்திருந்ததாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு தங்கலான் படக்குழு வாழ்த்து
உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திக் கோப்பையை வென்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், “300 ரன்களுக்கு கீழ் இந்திய அணியை சுருட்டியது மகிழ்ச்சி தந்தாலும், அதை எட்டிப்பிடிக்க முடியுமா? என படபடப்பு இருந்தது.ஆனால் டிராவிஸ் ஹெட் தனது சிறப்பான ஆட்டத்தால் வெற்றிக்கு உதவியது. உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பெற்ற வெற்றி வாழ்நாளில் மறக்க முடியாதது” எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “போதிய ரன்களை எடுக்காததே தோல்விக்கு முக்கிய காரணம்; 20 முதல் 30 ரன்களைக் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். டிராவிஸ் ஹெட்டும், லபுஷேனும் ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்துவிட்டனர். ஆடுகள் இந்தியா பேட் செய்த போதிருந்ததை விட ஆஸ்திரேலிய அணி பேட் செய்யும் போது மேம்பட்டிருந்தது.
திரிஷா இல்லனா மடோனா ….. லியோ வெற்றி விழாவிலும் இழிவாக பேசிய மன்சூர் அலிகான்!
ஆஸ்திரேலியா பேட் செய்யும் போது ஆடுகளம் அவர்களுக்கு சாதகமாக இருந்ததை தோல்விக்கு காரணமாகக் கூற முடியாது.