இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் (Stuart Broad) ஓய்வை அறிவித்தார்.
5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
இங்கிலாந்து நாட்டின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியுடன் விடைபெற்றார் ஸ்டூவர்ட் பிராட்.
பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
37 வயதான ஸ்டூவர்ட் பிராட், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக, கடந்த 2006- ஆம் ஆண்டு அறிமுகமாகி சுமார் 17 ஆண்டுகள் விளையாடியுள்ளார். இதுவரை 167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டூவர்ட் பிராட், 602 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி!
அதேபோல், 121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 178 விக்கெட்டுகளையும், 56 டி20 போட்டிகளில் விளையாடி, 65 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 3,656 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 529 ரன்களையும், டி20 போட்டிகளில் 118 ரன்களையும் எடுத்துள்ளார்.