
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்ஷ்மண் நியமிக்கப்பட வாய்ப்பு!
விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் 110 ரன்களையும், ஸ்மித் 52 ரன்களையும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஸ்னோய் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதைத் தொடர்ந்து, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களை எடுத்து, ஆஸ்திரேலிய அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
“2024 ஐ.பி.எல். தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார்”- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு!
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 58 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 80 ரன்களையும் எடுத்தனர்.