Homeசெய்திகள்விளையாட்டுடி20 தொடரை வென்றது இந்திய அணி!

டி20 தொடரை வென்றது இந்திய அணி!

-

 

டி20 தொடரை வென்றது இந்திய அணி!
Photo: BCCI

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது.

“பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட தயாரா?”- ஆளுநருக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வென்ற நிலையில் இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களையும், சஞ்சு சாம்சன் 40 ரன்களையும், ரிங்கு சிங் 38 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.அயர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பால்பிர்னீ 72 ரன்களையும், மார்க் அடைர் 23 ரன்களையும், கர்டிஸ் கேம்ஃபெர் 18 ரன்களையும் எடுத்தனர்.

“ஓட்டு வாங்கவே கச்சத்தீவு கையிலெடுப்பு”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

இந்திய அணி தரப்பில், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஸ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்தீப் சிங் ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.

MUST READ