டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் விளையாட 100% தயாராக இருப்பதாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
ஐ.பி.எல். தொடர் முடிந்ததும் தொடங்கவுள்ள டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரோலுக்கு ரிஷப் பந்த், சாம்சன், கே.எல்.ராகுல், இஷான் கிஷன் என பலரும் வரிசைக்கட்டி நிற்கின்றனர். இந்த நிலையில், நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்காக பினீஷர் ரோலில் கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக், மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பைப் பிரகாசப்படுத்தியுள்ளார்.
சென்னை அணியை வீழ்த்தி லக்னோ அணி அபாரம்!
இது தொடர்பாக பேசிய அவர் இந்தியாவிற்காக விளையாட மிகுந்த ஆவலாக உள்ளதாகவும், அதனை விட தனக்கு வேறு எதுவும் பெரியதில்லை எனவும் தெரிவித்துள்ளார். அணியில் இடம் பிடித்ததற்காக தன்னால் முடிந்ததை செய்வேன் என்று கூறிய அவர், தேர்வுக்குழுவினர் எடுக்கும் முடிவை மனதார ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார்.