Homeசெய்திகள்விளையாட்டுஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் இந்திய அணி தோல்வி!

ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் இந்திய அணி தோல்வி!

-

பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கித் தொடரில் ஜெர்மனி அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கித் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஹர்மன்பிரித் சிங் தலைமையிலான இந்திய அணி, பலம் வாய்ந்த ஜெர்மனி அணியுடன் மோதியது. பேட்டியின் 7-வது நிமிடத்தில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரித் கோல் அடித்து, அணியை முன்னிலை பெறச்செய்தார். பின்னர் 18 மற்றும் 27-வது நிமிடங்களில் ஜெர்மனி அணி கோல் அடித்த நிலையில், 36-வது நிமிடத்தில் இந்தியாவின் சுக்ஜீத் சிங் கோல் அடித்து போட்டியை 2-2 என சமன் செய்தார். இந்த நிலையில், போட்டியின் 54வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மார்கோ கோல் அடித்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறச்செய்தார்.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதியில் தோற்றாலும் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடுகிறது. இந்தியா வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டி இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதுபோல், பாரிஸ் ஒலிம்பிக்கிலும் வெண்கலப்பதக்கத்தை தக்கவைக்கும் முனைப்புடன் இந்திய அணி உள்ளது

MUST READ