தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக்
(TNPL) போட்டிகளின், 8ஆவது சீசன் ஜூலை 5ஆம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் 17 ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Paytm Insider மூலம், மாலை 6 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ளதாகவும் ஒரு டிக்கெட் விலை ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எல் ( TNPL ) நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜூலை 5-ம் தேதி முதல் ஆகஸ்டு 4-ம் தேதி வரை நடைபெறும் டி.என்.பி.எல் (TNPL) கிரிக்கெட் போட்டி சென்னை, கோவை, திண்டுக்கல், நெல்லை மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 17 வரையிலான போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் ஒன்பது போட்டிகள் சேலத்தில் ஜூலை 5 முதல் 11-ம் தேதி வரையும், அடுத்த 10 முதல் 17 வரையிலான போட்டிகள் கோவையில் ஜூலை 13 முதல் 18- ம் தேதி வரையும் நடைபெறுவுள்ளதாகவும் டி.என்.பி.ல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.