Homeசெய்திகள்விளையாட்டுஇன்று ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது

இன்று ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது

-

- Advertisement -

சென்னை அணியை சமாளிக்குமா நடப்பு சாம்பியன் குஜராத்!

இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதலாவது போட்டியில் பஞ்சாப் – டெல்லி அணிகளும், இரண்டாவது போட்டியில் கொல்கத்தா – ஐதரபாத் அணிகள் மோதுகின்றன.

17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதலாவது லீக் ஆட்டத்தில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – பாப் டூ பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகளும் நேற்றிரவு மல்லுக்கட்டின. இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று 2 ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகிறது. அதாவது மாலை 3.30 மணியளவில் நடைபெறும் முதலாவது போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் – ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளும் மோதுகின்றன. இப்போட்டியானது சண்டிகர் மகாராஜா யாவிந்திரா சிங் இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இதனைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இரண்டாவது போட்டியாக ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதரபாத் அணிகளும் மோதுகின்றன. போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

MUST READ