19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
ஊர்வசி நடிப்பில் உருவாகும் J.பேபி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்த நிலையில், பின்னர் விளையாடிய இந்திய அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முருகன் அபிஷேக் 42 ரன்களையும், முஷீர் கான் 22 ரன்களையும், ஆதர்ஷ் சிங் 47 ரன்களையும் எடுத்திருந்தார்.
சிவகார்த்திகேயனின் ‘SK23’ படத்தில் இணையும் பிரபல நடிகர்கள்…… யார் யார் தெரியுமா?
ஏற்கனவே, கடந்த 2022- ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி உலகக்கோப்பையும், 2023- ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியும், உலகக்கோப்பை கிரிக்கெட் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய ஆண்கள் அணியும் வெற்றி பெற்றுள்ளது.