Homeசெய்திகள்விளையாட்டுகுகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு ‘கேல் ரத்னா விருது’..

குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு ‘கேல் ரத்னா விருது’..

-

- Advertisement -
குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு ‘கேல் ரத்னா விருது’..
உலக செஸ் சாம்பியன் குகேஷ், துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த மனு பாக்கர் உள்ளிட்ட நால்வருக்கு மத்திய அரசு கேல் ரத்னா விருதை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு குடியரசு தினத்திற்கு முன்பாக தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்து விருதுகள் வழங்கி வருகிறது. குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் 2024ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்துள்ளது. அதன்படி “மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா” விருது 4 பேருக்கு வழங்கப்படுவதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு ‘கேல் ரத்னா விருது’..

2024ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் உலக செஸ் சாம்பியன் பட்ட பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் குகேஷ்-க்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுப்பட்டுள்ளது. இதேபோல், 2024ல் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாக்கர் , ஹாக்கி வீரர் ஹரம் பிரீத் சிங் , பாரா-தடகள வீரர் பிரவீன் குமார் உள்ளிட்ட 4 பேருக்கு மத்திய அரசின் உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதுகள் ஜனவரி 15ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் அவர்களால் வழங்கப்படும் எனவும் மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் கூறியுள்ளது.

MUST READ