Homeசெய்திகள்விளையாட்டு”சூப்பர் 8” சுற்றில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

”சூப்பர் 8” சுற்றில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

-

டி20 உலகக் கோப்பை ”சூப்பர் 8” சுற்று முதலாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள்‘சூப்பர் 8’ சுற்றில் பலப்பரீட்சை நடத்த வேண்டும். அதன் பிறகு ஜூன் 24ம் தேதி அரையிறுதி ஆட்டங்களும், ஜூன் 29ம் தேதி பிரிட்ஜ்டவுனில் பைனலும் நடக்க உள்ளன. இந்தத் தொடரில் லீக் ஆட்டமானது நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் இன்று நடைபெறும் ’சூப்பர் 8’ சுற்றில் முதலாவது ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.  இதில் அமெரிக்கா அணி மோனக் பட்டேல் தலைமையிலும் தென்னாப்பிரிக்கா அணியானது ஏய்டன் மார்க்ராம் தலைமையிலும் களம் காண்கின்றன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ் உள்ள சர் விவியர் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்குகிறது. முதலாவது சூப்பர் 8 சுற்றில் இரு அணிகளும் மோதும் இந்தாட்டமானது இவ்விரு அணிகளும் வெற்றிபெற கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனக் பட்டேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தற்போது வரை அணியானது 5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டுகள் இழந்து 56 ரன்கள் எடுத்துள்ளது.

 

MUST READ