
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி, பல புதிய சாதனைகளைப் படைத்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் சச்சினின் சாதனையை முறியடிக்க, அவருக்கு இரண்டு சதங்களே தேவை.
228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்!
குறைந்த இன்னிங்ஸில் 13,000 ரன்கள், கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் தொடர்ந்து 4 சதங்கள், ஆசியக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் அதிக சதமடித்தவர்களின் வரிசையில் இரண்டாவது இடம். இவை அனைத்தும் விராட் கோலியின் ஒருநாள் போட்டிக்கான சாதனை புத்தகத்தில் புதிதாகப் பொறிக்கப்பட்டன.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, எப்படி ஒரு இன்னிங்ஸைக் கட்டமைக்க வேண்டும் என பாடம் நடத்தும் வகையில், விளையாடிய விராட் கோலி 98 ரன்களை எடுத்த போது, ஒருநாள் போட்டிகளில் மிக விரைவாக 13,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை தன்வசமாக்கினார்.
267 இன்னிங்ஸில் 13,000 ரன்களைக் கடந்த விராட் கோலி, 321 இன்னிங்ஸில் இலக்கை எட்டியிருந்த சச்சினின் சாதனையை முறியடித்திருந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த இலக்கை கடந்த ஐந்தாவது வீரர் விராட் கோலி. கொழும்பு பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் தொடர்ந்து நான்கு சதங்களை அடித்தவர் என்ற புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில், ஒரே மைதானத்தில் தொடர்ச்சியாக நான்கு சதங்களை விளாசிய பெருமை, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் அசிம் ஹாம்லா வசம் உள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் ஒத்திவைப்பு!
ஆசியக்கோப்பைப் போட்டிகளில் 4 சதங்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள விராட் கோலி, அதிக சதமடித்தவர்களின் வரிசையில் ஆறு சதங்களை விளாசிய இலங்கை அணியின் ஜன சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.