அகமதாபாத் ஒருநாள் போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு விராட் கோலி இறுதியாக முற்றுப்புள்ளி வைத்தார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார். வலது கை பேட்ஸ்மேனான அவர் 55 பந்துகளில் 52 ரன்களை குவித்தார். விராட் கோலி 52 ரன்கள் என்பது பெரிய விஷயமல்ல. ஆனால், அவர் இந்த இந்த அரை சதம் கோலியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது. விராட் கோலி அகமதாபாத்தில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் அரைசதம் அடித்தார். அவர் 451 நாட்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் அரைசதம் கண்டுள்ளார்.
இரண்டாவது ஓவரிலேயே விராட் கோலி களமிறங்கினார். கேப்டன் ரோஹித் சர்மா அகமதாபாத்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதற்குப் பிறகு, மார்க் வுட் பந்து வீச்சில் விராட் கோலியை மிகவும் அச்சுறுத்தினார். ஆனாலும் பொறுமையாக பேட்டிங் செய்தார் கோலி. செட் ஆன பிறகு, விராட் கோலி தனது ஷாட்களை பறக்க விட்டார். அவர் ஃபிளிக்ஸ் முதல் கவர் டிரைவ்கள் வரை அனைத்து பந்துகளையும் எதிர்கொண்டார்.
ஆனால் அகமதாபாத்தில் அதை கோலி தனது வாய்ப்பை தவறவிட்டார். அடில் ரஷீத்தின் சிறந்த லெக் ஸ்பின் காரணமாக விராட் கோலி பெவிலியன் திரும்ப வேண்டியிருந்தது. விராட் கோலி 10 போட்டிகளில் ஐந்தாவது முறையாக அடில் ரஷீதிடம் அவுட்டாகி உள்ளார். ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடங்கவிருக்கும் போது இவ்வளவு மோசமான கட்டத்திற்குப் பிறகு, விராட்டின் பேட்டில் இருந்து வரும் ரன்கள் இந்திய அணிக்கு தெம்பூட்டியுள்ளது.