நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. ஐ.பி.எல். போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 8 சதங்களை விளாசிய விராட் கோலிக்கு, இந்த ஒரு சதம் மோசமான சாதனையும் பெற்றுக் கொடுத்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கிய 2008- ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் மட்டுமே விளையாடியிருக்கும் விராட் கோலி படைத்த சாதனைகள் ஏராளம். கிங் என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்படும் விராட் கோலியின் சாதனை பயணம் தற்போதும் தொடர்கிறது.
ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 242 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் தான் அதிக ரன் எடுத்த வீரர். இதுவரை 7,579 ரன்களை குவித்துள்ளார் விராட் கோலி. ஒரு சீசனில் அதிக ரன் விளாசிய வீரரும் விராட் கோலி தான். கடந்த 2016- ஆம் ஆண்டு மட்டும் அவர் 973 ரன்களைக் குவித்து இமாலய சாதனை படைத்துள்ளார்.
பார்ட்னர் ஷிப்பில் அதிக ரன்களைக் குவித்துள்ள சாதனை பட்டியலிலும் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். கடந்த 2016- ஆம் ஆண்டு குஜராத் லைன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி – டிவில்லியர்ஸ் இணை 229 ரன்களை குவித்ததே இப்போது வரை ஐ.பி.எல்.லில் பார்ட்னர் ஷிப் ஸ்கோராக உள்ளது.
மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 8 சதங்களை விளாசிய ஒரே வீரரும் விராட் கோலி தான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 113 ரன்களை குவித்ததுடன், நடப்பு கிரிக்கெட் தொடரில் 5 போட்டிகளில் 316 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியையும் தன் வசப்படுத்தியுள்ளார்.
வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை – டெல்லி அணியுடன் இன்று மோதல்!
அதே நேரத்தில், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மெதுவாக சதமடித்த வீரர் என்ற மோசமான சாதனையும் கொண்டுள்ளார் விராட் கோலி. அவர் தனது 8-வது சதத்தைப் பூர்த்திச் செய்ய 67 பந்துகளை எடுத்துக் கொண்டதே இதற்கு காரணம்.