Homeசெய்திகள்விளையாட்டுவிராட்டின் 30-வது சதம்: சச்சினை பின் தள்ளி ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை

விராட்டின் 30-வது சதம்: சச்சினை பின் தள்ளி ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை

-

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி சமீபகாலமாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்தார். இந்த ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு முன்பு, அவர் 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் மட்டுமே எடுத்திருந்தார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பல சாதனைகளை முறியடிக்க உள்ள விராட் கோலி!
Photo: BCCI

பெர்த் டெஸ்டின் முதல் இன்னிங்சிலும் விராட் தோல்வியடைந்தார். வெறும் 5 ரன்கள் எடுத்த நிலையில், ஜோஷ் ஹேசில்வுட்டின் பந்தில் அவுட் ஆனார். ஆனால் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்றாவது நாள் விராட் தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, விராட் கோலி தனது வழக்கமான பாணிக்கு திரும்பியுள்ளார். விராட் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்து தனது 30வது சதத்தை பூர்த்தி செய்தார். டெஸ்டில் 30 சதங்கள் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் பெற்றுள்ளார். இதற்கு முன், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோர் இந்தியாவுக்காக 30க்கும் அதிகமான சதங்களை அடித்துள்ளனர். சர் டான் பிராட்மேன் டெஸ்டில் 29 சதங்கள் அடித்துள்ளார்.ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!

ஆஸ்திரேலியாவில் அதிக டெஸ்ட் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் விராட்டின் 7வது சதம் இதுவாகும். விராட் சச்சின் டெண்டுல்கர் சச்சின் 38 இன்னிங்ஸ்களில் 6 சதங்கள் அடித்துள்ளார். விராட் 27 இன்னிங்ஸ்களில் 7 சதங்கள் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் அதிக டெஸ்ட் சதம் அடித்த இந்திய வீரர்
விராட் கோலி – 7 (27 இன்னிங்ஸ்)
சச்சின் டெண்டுல்கர் – 6 (38 இன்னிங்ஸ்)
சுனில் கவாஸ்கர் – 5 (19 இன்னிங்ஸ்)
விவிஎஸ் லட்சுமண்- 4 (29 இன்னிங்ஸ்)
சேதேஷ்வர் புஜாரா- 3 (21 இன்னிங்ஸ்)

விராட் கோலி தனது கடைசி சதத்தை ஜூலை 2023 ல் டெஸ்டில் அடித்தார். மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது அந்த சதம் அடிக்கப்பட்டது. தற்போது 17 மாதங்களுக்குப் பிறகு, இந்திய முன்னாள் கேப்டன் டெஸ்டில் சதம் அடித்துள்ளார். 2019 வரை விராட் டெஸ்டில் 27 சதங்கள் அடித்துள்ளார். அதன்பின், இது அவரது மூன்றாவது சதம் மட்டுமே. கடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் படுதோல்வி அடைந்ததால், அவர் அணியில் இருப்பது குறித்து கேள்விகள் எழுந்தன.

MUST READ