Homeசெய்திகள்சர்வதேச சதுரங்க தினத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பரிசளித்த விஸ்வநாதன் ஆனந்த்

சர்வதேச சதுரங்க தினத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பரிசளித்த விஸ்வநாதன் ஆனந்த்

-

 

சர்வதேச சதுரங்க தினத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பரிசளித்த விஸ்வநாதன் ஆனந்த்

சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) ஜூலை 20, 1924 இல் பாரிஸில் முதல் சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகளில் ஒன்றாக நிறுவப்பட்டது. நிறுவப்பட்ட தேதியைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி உலக அளவில் சர்வதேச சதுரங்க தினம் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச சதுரங்க தினமான இன்று தமிழ்நாட்டில் மாநில அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தனது கையெழுத்திட்ட  சதுரங்க போர்டுகளை அன்பளிப்பாக சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் வழங்கியுள்ளார்.

கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவில் பல சாதனையாளர்களை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டின் சதுரங்க விளையாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்து ஐந்து முறை சதுரங்க உலக சாம்பியன் மற்றும் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE) துணைத் தலைவராக உள்ளார்.

சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க துப்பில்லாத அரசு, மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப் பதிவதா? – அன்புமணி கேள்வி

இந்தியாவில் சதுரங்க விளையாட்டில் பெருமளவு கிராண்ட் மாஸ்டர்களை கொண்ட மற்றும் உலக சதுரங்க போட்டிகளில் பெரிதளவில் பங்குபெறும் வீரர்களை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவிற்கு தொடர்ந்து பெருமை சேர்க்கும் வகையில் தமிழக கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி, குகேஷ் மற்றும் பல தமிழக வீரர்கள் சாதனைகள் படைத்துள்ளனர். சமீப காலமாக தமிழ்நாட்டில் சதுரங்க விளையாட்டில் குழந்தைகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். பிற விளையாட்டுகள் உடல் திறனை வளர்க்க உதவும் ஆனால் சதுரங்க விளையாட்டு என்பது மூளை செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது.

சர்வதேச சதுரங்க தினத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பரிசளித்த விஸ்வநாதன் ஆனந்த்

சர்வதேச சதுரங்க தினத்தை கொண்டாடும் விதமாக மற்றும் மாணவர்களிடையே சதுரங்க ஆர்வத்தை ஊக்குவிக்குவதற்காக, மாநில அளவிலான சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு விஸ்வநாதன் ஆனந்த் தனது சொந்த முயற்சியில் சதுரங்க போர்டுகளை  ஆட்டோகிராஃபுடன், அன்பளிப்பாக வழங்கி  அத்துடன் சேர்த்து வாழ்த்துக் கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் “இந்த சர்வதேச சதுரங்க தினத்தில், உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது முடிவற்ற சாத்தியங்கள், கற்றல் மற்றும் சுய-கண்டுபிடிப்பு ஆகியவற்றின் பயணம். நீங்கள் சர்வதேச சதுரங்க தினத்தை கொண்டாடும் இந்த நாளில், எனது சொந்த பயணத்தின் சில தருணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என்று தொடங்கி, சதுரங்க விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து  எழுதியுள்ளார்.

MUST READ