கே.எல் ராகுலிடம் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டி அளித்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இரு அணிகளும் விளையாட உள்ளது எனவே முதல் டெஸ்ட் தொடர் வருகிற 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு இடையே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களிடம் பேசியபோது,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளுமே முக்கியம் தான் எனவே வங்கதேசம் போட்டியை தொடர்ந்து, நியூசிலாந்து எதிராக நடைபெறும் தொடரும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான ரிகர்சல் போட்டி கிடையாது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் திறந்த நிலையில் உள்ளது ஏனென்றால் அங்கு யார் வேண்டுமானாலும் இடம் பிடிக்கலாம். இதனால் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டியது முக்கியமான ஒன்று. இதனால் அடுத்து இரண்டு மாதங்களில் எங்கு விளையாடுகிறோம் என்பது முக்கியமில்லை அதில் வெற்றி பெறுகிறோமா என்பது தான் முக்கியம்.
தற்போது வங்கதேசத்துக்கு எதிராக விளையாடக்கூடிய இந்த டெஸ்ட் தொடரையும் வெல்ல விரும்புகிறோம். அதன் அடிப்படையில் இந்த டெஸ்ட் தொடரை நாங்கள் அணுக இருக்கோம்.
பெரியார் செய்ய வேண்டியதை செய்துவிட்டார், நாம் என்ன செய்ய போகிறோம்
ஒரு மாதம் ஓய்வுக்குப் பிறகு இப்போது தான் டெஸ்ட் போட்டியை விளையாட தொடங்குகிறோம் எனவே இந்த இடத்தில் இருந்து உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு. டெஸ்ட் போட்டி தொடங்கிய பிறகு தான் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை அறிய முடியும் எனவே அங்கிருந்து நாம் முன்னேறி செல்ல வேண்டும்.
எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏற்றம் இறக்கம் இருக்கும் எனவே எல்லோரும் அறிந்தது தான் கே.எல்.ராகுல் நல்லா விளையாட கூடிய வீரர் அதனால் கே.எல் ராகுலுக்கு எங்கள் தரப்பில் இருந்து கூறுவது ஒரே ஒரு செய்தி மட்டும்தான் எல்லா போட்டிகளிலும் விளையாட வேண்டும் அதுவும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.