மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும், இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது.
உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு!
டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதலில் பந்து வீச முடிவுச் செய்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 80 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 57 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சுப்மன் கில், ரஹானே ஆகியோர் சொற்ப ரங்களில் வெளியேறினர். பின்னர், களமிறங்கிய விராட் கோலி, ஜடேஜா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 84 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்களைக் குவித்துள்ளது.