Homeசெய்திகள்விளையாட்டுமகளிர் பிரீமியர் லீக்: குஜராத்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அசத்தல் வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக்: குஜராத்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அசத்தல் வெற்றி!

-

- Advertisement -

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணியை, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களுரு அணி அபார வெற்றி பெற்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு மற்றும் குஜராத்  ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களுரு அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனா, பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து முதலில் களமிறங்கிய குஜராத் அணி, அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியில் அதிபட்சமாக ஆஷ்லி கார்ட்னர்  37 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். பெத் மூனி 56 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களுரு அணி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை எடுத்தனர். பெங்களுரு அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 202 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களுரு அணி தரப்பில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 27 பந்துகளில் 64 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். நட்சத்திர வீராங்கனை எல்லிஸ் பெர்ரி 57 ரன்கள் எடுத்தார்.

MUST READ