
50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான சர்வதேச தூதரக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
நைஜரில் பயங்கரவாத தாக்குதல்- 29 ராணுவ வீரர்கள் படுகொலை
அகமதாபாத்தில் நாளை (அக்.05) முதல் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக, உலகக்கோப்பை டிராபியுடன் வரும் சச்சின் டெண்டுல்கர் போட்டியை தொடங்கி வைக்க உள்ளார். பார்வையாளர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில், முன் எப்போதும் இல்லாத வகையில், முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான வில்லியர்ஸ், முத்தையா முரளிதரன், ரிச்சர்ட்ஸ், மோர்கன், முகமது ஹபீஸ், சுரேஷ் ரெய்னா போன்றவர்களும் இதில் இடம் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய கிரிக்கெட் மகளிரணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜும் இந்த பட்டியலில் உள்ளார்.
உலகக்கோப்பைக்கான சர்வதேச தூதரக ஐ.சி.சி. நியமனம் செய்தது குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், இந்த அற்புதமான தொடரை உற்சாகப்படுத்த எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். உலகக்கோப்பை போன்ற மறக்க முடியாத நிகழ்வுகள் இளம் வீரர்களின் இதயங்களில் கனவுகளை விதைப்பதாகவும் தெரிவித்தார்.
“சிறையில் நஞ்சு வைத்து இம்ரான் கான் கொல்லப்படலாம்”- வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி!
இந்தியாவில் நாளை (அக்.05) முதல் உலகக்கோப்பைக் கிரிக்கெட் திருவிழா தொடங்கவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.