Homeசெய்திகள்விளையாட்டுஐ.சி.சி.க்கு அனுப்பப்பட்ட உறுதிப்படுத்தப்படாத அட்டவணை வெளியீடு!

ஐ.சி.சி.க்கு அனுப்பப்பட்ட உறுதிப்படுத்தப்படாத அட்டவணை வெளியீடு!

-

 

கிரிக்கெட் விதிகளில் மாற்றம்- ஐ.சி.சி. அறிவிப்பு!
File Photo

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாட உள்ள ஆட்டங்களின் உறுதிப்படுத்தப்படாத அட்டவணை வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள, தமிழ் நடிகர் மரணம்!

நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியை வரும் அக்டோபர் 8- ஆம் தேதி அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. அதேபோல், அக்டோபர் 15- ஆம் தேதி பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.

இந்த உத்தேச அட்டவணை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி.க்கு அனுப்பப்பட்டுள்ளது. மற்ற நாடுகளின் ஒப்புதலைப் பெற்று அடுத்தவாரம் இறுதி அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளூ சட்டை மாறனுக்கு நன்றி சொன்ன அசோக் செல்வன்… ஏன் தெரியுமா!?

வரும் அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெறவுள்ள 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர், சென்னை, டெல்லி, அகமதாபாத், புனே, தர்மசாலா, லக்னோ, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ