உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர்- ஆஸ்திரேலிய அணி பேட்டிங்!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்.08) மதியம் 02.00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடியது.
இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 46 ரன்களையும், வார்னர் 41 ரன்களையும் எடுத்தனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசாணையை வெளியிட்டு அதிரடி காட்டிய ராஜஸ்தான் அரசு!
இந்திய அணி தரப்பில், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், பும்ரா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், சிராஜ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அதைத் தொடர்ந்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.