Homeசெய்திகள்விளையாட்டுஉலகக்கோப்பை 2ஆவது அரையிறுதிப் போட்டி- தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்!

உலகக்கோப்பை 2ஆவது அரையிறுதிப் போட்டி- தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்!

-

 

உலகக்கோப்பை 2ஆவது அரையிறுதிப் போட்டி- தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்!
Photo: ICC

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2ஆவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வுச் செய்தது தென்னாப்பிரிக்கா அணி.

“வரும் சனிக்கிழமை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்”- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ.16) மதியம் 02.00 மணியளவில் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது தென்னாப்பிரிக்கா அணி.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடி வருகிறது. நடப்பு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் இரு அணிகளுமே தலா 7 போட்டிகளில் வென்றுள்ளன. ஆஸ்திரேலியா அணியில் மார்க்கஸ், ஷான் ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில், மேக்ஸ்வெல், மிட்செல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

“ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் என்னென்ன?”- விரிவாகப் பார்ப்போம்!

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் நவம்பர் 19- ஆம் தேதி நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ