உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், தென்னாப்பிரிக்க அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
‘ஜவுளி நிறுவனங்கள் போராட்டத்திற்கு தீர்வுக்காண வேண்டும்”- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ.05) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் விராட் கோலி 101 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களையும், ரோஹித் சர்மா 40 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 29 ரன்களையும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 27.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்களை எடுத்தது. இதனால் தென்னாப்பிரிக்க அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆர்.எஸ்.பாரதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!
இந்திய அணி தரப்பில், ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், முகமது ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் எடுத்துள்ளார்.