Homeசெய்திகள்விளையாட்டுஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கல்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கல்!

-

 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கல்!
File Photo

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இன்று அவருக்கு மீண்டும் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை!

இந்த பரிசோதனை முடிவின் அடிப்படையில், நாளை மறுநாள் (அக்.08) நடைபெறவுள்ள இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் அவர் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தொடங்கியுள்ள நிலையில், நாளை மறுநாள் (அக்.08) சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி உடன் இந்திய அணி பலப்பரீட்சை மேற்கொள்ளவுள்ளது. இதற்காக, இரு அணிகளும் சென்னை வந்துள்ள நிலையில், அதற்கான பயிற்சிகளிலும் இரண்டு அணி வீரர்களும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவர் மின்சாரம் பாய்ந்து பலி

இந்த போட்டியில் சுப்மன் கில் பங்கேற்காத பட்சத்தில் அவருக்கு பதில் இஷான் கிஷன் அல்லது கே.எல்.ராகுல், கேப்டன் ரோஹித் சர்மாவுடன் முதலில் களமிறக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ