Homeசெய்திகள்விளையாட்டு"உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு பி.சி.சி.ஐ. அழைப்பு விடுக்கவில்லை"- கபில்தேவ் வேதனை!

“உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு பி.சி.சி.ஐ. அழைப்பு விடுக்கவில்லை”- கபில்தேவ் வேதனை!

-

- Advertisement -

 

"உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு பி.சி.சி.ஐ. அழைப்பு விடுக்கவில்லை"- கபில்தேவ் வேதனை!
File Photo

“உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைக் காண பி.சி.சி.ஐ. தனக்கு அழைப்பு விடுக்கவில்லை” என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘ப்ரதர்’ படத்தின் ரிலீஸ் எப்போது?

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (நவ.19) நடைபெற்றது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவிற்கு போட்டியைக் காண அழைப்பு விடுக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக பேசிய கபில்தேவ், “உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு பி.சி.சி.ஐ. தன்னை அழைக்கவில்லை என்பதால், தாம் அங்கே செல்லவில்லை. எனினும், இந்தியாவிற்காக, உலகக்கோப்பையை முதன்முதலில் வென்றுக் கொடுத்த 1983- ஆம் ஆண்டு இந்திய அணி, அகமதாபாத் மைதானத்தில் இருக்க வேண்டும் என விரும்பினேன்.

திரிஷா இல்லனா மடோனா ….. லியோ வெற்றி விழாவிலும் இழிவாக பேசிய மன்சூர் அலிகான்!

அங்கு நிறைய வேலைகள் நடந்துக் கொண்டிருந்ததால், பொறுப்புகள் இருந்திருக்கலாம்; அதுபோன்ற சூழலில் சிலர் மறந்திருக்கலாம்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

MUST READ