Homeசெய்திகள்விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி- பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி- பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

-

- Advertisement -

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி- பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
Photo: ICC

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், பட்டம் வெல்லும் அணிக்கு 13 கோடியே 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.

மத்தீஷா பதிரானாவின் குடும்பத்தினருடன் தோனி சந்திப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜூன் 7- ஆம் தேதி அன்று தொடங்குகிறது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில், வென்று சாம்பியன் ஆகும் அணிக்கு 13 கோடியே 20 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு 6 கோடியே 60 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் இடம் பிடித்த தென்னாப்பிரிக்கா அணிக்கு 3 கோடியே 70 லட்சம் ரூபாயும், நான்காம் இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு 2 கோடியே 90 லட்சம் ரூபாய், ஐந்தாவது இடம் பிடித்த இலங்கை அணிக்கு 1 கோடியே 65 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஐ.பி.எல். கோப்பையை வெல்லப் போவது யார்?

ஆறு முதல் ஒன்பது இடங்களைப் பிடித்த நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு தலா 83 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்றழைக்கப்படும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

MUST READ