உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், ரஹானே மற்றும் ஷர்துல் தாகூர் ரன் குவிப்பால், இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்தது.
சுந்தர் பிச்சை கடந்து வந்த பாதை….மதுரை முதல் அமெரிக்கா வரை!
மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 469 ரன்களை குவித்தது.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, தொடர் இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. ரஹானேவும், ரவீந்திர ஜடேஜாவும் ஓரளவு நிலைத்து ஆடினர். ஜடேஜா 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ரஹானே நிதானமாக விளையாடி 89 ரன்களைக் குவித்தார். அடுத்து வந்த ஷர்துல் தாகூர் தன் பங்கிற்கு 51 ரன்களை எடுத்தார்.
இறுதியில் இந்திய அணி 796 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஃபாலோ ஆன் ஆகும் இக்கட்டில் இருந்து இந்திய அணி தப்பியது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கமின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், போலந்து, க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். இதனையடுத்து, 173 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது.
தமிழகம் வரும் அமித்ஷா பின்னணி என்ன?- விரிவான தகவல்!
முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஸ்மித், ஹெட் இருவரும் குறைந்த ரன்களில் அவுட் ஆனார்கள். மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்களை எடுத்துள்ளது. இத்துடன், ஆஸ்திரேலியா அணி 296 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலுவையில் உள்ளது. இன்னும் இரண்டு நாள் போட்டி எஞ்சியுள்ளது.