Homeசெய்திகள்விளையாட்டுசிறப்பாக ஆடி சதம் அடித்து அசத்திய ஜெய்ஷ்வால்!

சிறப்பாக ஆடி சதம் அடித்து அசத்திய ஜெய்ஷ்வால்!

-

- Advertisement -

 

சிறப்பாக ஆடி சதம் அடித்து அசத்திய ஜெய்ஷ்வால்!
Photo: BCCI

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

விஜய் சேதுபதியின் 51 வது பட டைட்டில் இதுதானா?

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி காசு சுண்டலில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடியது. இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோருக்கு மாற்றாக, ரஜத் பட்டித்தார், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் சோயப் பஷிர், ஆண்டர்சன் ஆகியோர் களம் கண்டனர். இந்தியாவின் ரஜத் பட்டித்தார், இங்கிலாந்து அணியின் சோயப் பஷிர் ஆகியோருக்கு இது அறிமுகப் போட்டியாகும். ஜெய்ஷ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு நிதானமான தொடக்கத்தை தந்தனர்.

மொட்டை தல காத்தவராயன்….. தனுஷின் ‘D50’ பட அப்டேட்!

14 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய சுப்மன் கில், ஜெய்ஷ்வாலுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். 34 ரன்களை எடுத்திருந்த நிலையில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஷ்வால் அரைசதம் அடித்து அசத்தினார். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் தலா 27 ரன்களை எடுத்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் அடிக்க வேண்டிய பந்துகளை எல்லைக் கோடுகளுக்கு பறக்கவிட்ட ஜெய்ஷ்வால் 94 ரன்களில் இருந்து சிக்ஸரை பறக்கவிட்டு சதமடித்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ரன்களை எடுத்திருந்தது. ஜெய்ஷ்வால் 179 ரன்களுடனும், ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இங்கிலாந்து அணியின் அறிமுக வீரரான சோயப் பஷிர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

MUST READ