Homeசெய்திகள்விளையாட்டுயோ யோ டெஸ்டில் 18.7 புள்ளிகள் எடுத்து அசத்திய சுப்மன் கில்!

யோ யோ டெஸ்டில் 18.7 புள்ளிகள் எடுத்து அசத்திய சுப்மன் கில்!

-

 

யோ யோ டெஸ்டில் 18.7 புள்ளிகள் எடுத்து அசத்திய சுப்மன் கில்!
Photo: BCCI

கிரிக்கெட்டில் உடல் தகுதியை நிரூபிப்பதற்கான யோ யோ டெஸ்டில் இந்திய வீரர் சுப்மன் கில் 18.7 புள்ளிகளைப் பெற்று அசத்தியுள்ளார்.

யோகி பாபுவின் ‘லக்கி மேன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வரும் ஆகஸ்ட் 31- ஆம் தேதி தொடங்கும் ஆசிய கிரிக்கெட் கோப்பைத் தொடர், செப்டம்பர் 17- ஆம் தேதி வரை பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் நடைபெறவுள்ளது. ஆசிய கிரிக்கெட் கோப்பைக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்றழைக்கப்படும் பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்திய அணி பெங்களூருவில் முகாமிட்டுள்ளது. அணியில் இடம் பெறுவதற்கு யோ யோ டெஸ்டில் 16.5 புள்ளிகள் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் 18.7 புள்ளிகளை எடுத்து உடல் தகுதியை நிரூபித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘SK21’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

விராட் கோலி 17.2 புள்ளிகளை எடுத்துள்ளார். மற்ற வீரர்களும் உடல் தகுதியை நிரூபித்துள்ளதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ