Homeசெய்திகள்விளையாட்டுஜிம்பாவே அணிக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா - இரண்டாவது டி20 ஆட்டத்தில் இன்று மோதல்

ஜிம்பாவே அணிக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா – இரண்டாவது டி20 ஆட்டத்தில் இன்று மோதல்

-

ஜிம்பாவேvsஇந்தியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹாரரேவில் இன்று நடைபெறுகிறது.

ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டமானது ஜிம்பாவேவில் உள்ள ஹாரரே மைதானத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. போட்டியில் இந்திய அணியானது சுப்மான் கில் தலைமையிலும் ஜிம்பாவே அணியானது சிக்கந்தர் ராசா தலைமையிலும் களம் கண்டன. இப்போட்டியில் ஜிம்பாவே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற அதே மைதானத்தில் இந்திய அணி ஜிம்பாவே அணியிடம் இரண்டாவது டி20 போட்டியில் இன்று விளையாடுகிறது. நேற்று நடந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஜிம்பாவே அணி தங்களது வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் இந்தாட்டமானது விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

MUST READ