Homeசெய்திகள்பொங்கல் நாளில் தேர்வு.. எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை - சு.வெங்கடேசன் காட்டம்..

பொங்கல் நாளில் தேர்வு.. எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை – சு.வெங்கடேசன் காட்டம்..

-

Su.Venkatesan - சு.வெங்கடேசன்
பொங்கல் நாளில் நடைபெற இருந்த சிஏ ஃபவுண்டேஷன் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் எம்.பி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு.

Image

தேதிகளை மாற்றுமாறு ஒன்றிய அமைச்சருக்கும், ICAI தலைவருக்கும் கடிதம் :

சி ஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Image

“அறுவடைத் திருநாளான” பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு ஒன்றிய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் ICAI தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வால் அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ