அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்களான சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர் இருவரும் 9 மாதங்களுக்குப்பின் சர்வதேச விண்வெளிநிலையத்திலிருந்து நாளை(மார்ச்18) மாலை பூமிக்கு திரும்புகிறார்கள் என நாசா அறிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சில ஆய்வுக்கு சுனிதா, வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்றனர். 8 நாட்களில் பணியை முடித்து பூமிக்கு திரும்ப வேண்டியநிலையில், இவர்கள் சென்ற விண்கலம் பழுதாகி அதிலிருந்த ஹீலியம் வாயு முழுவதும் வெளியேறியது. இதனால் இருவரும் பூமிக்கு திரும்பமுடியாமல் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திலேயே சிக்கினர்.
இந்நிலையில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன், டிராகன் ராக்கெட் மூலம் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரையும் அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. கடந்த வாரம் புதன்கிழமையே ராக்கெட்டை ஃபுளோரிடாவில் உள்ள கேப்கெனரவல் விண்வெளி தளத்திலிருந்து ஏவத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கவுண்ட்வுன் முடிய 45 நிமிடங்கள் இருக்கையில் ராக்கெட்டில் இருக்கும் ஹெட்ராலிக் சரியாகச் செயல்படவில்லை என்பதால் ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் தொழில்நுட்ப வல்லுநர்கள் அந்த பழுதை சரி செய்தபின், சனிக்கிழமை அதிகாலை டிராகன் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
இந்த ராக்கெட்டில் இந்த ராக்கெட்டில் விண்வெளி வீரர்கள் ஆனி மெக்லைன், விமானி நிக்கோல் ஆயெர்ஸ், ஜப்பானிய விண்வெளி வீரர் டகுயா ஒனிஷா, ரஷ்ய விண்வெளி ஆய்வாளர் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் இருந்தனர். இவர்கள் சர்வதேச விண்வெளிநிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரையும் பூமிக்கு அனுப்பிவைத்து, இவர்கள் 4 பேரும் அங்கு பணியாற்றுவார்கள்.
இதன்படி டிராகென் ராக்கெட் திட்டமிட்டபடி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது, விண்வெளி வீரர்களும், சுனிதா வில்லியம்ஸ், வில்மோரைச் சந்தித்தனர். இவர்கள் மார்ச் 18ம் தேதி மாலை பூமிக்கு ராக்கெட் மூலம் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது. இது குறித்து நாசா வெளியிட்ட அறிவிப்பில் “ சர்வதேச விண்வெளிநிலையத்தில் கடந்த 9மாதங்களுக்கும் மேலாக சிக்கியிருந்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரையும் அழைத்துக் கொண்டு அமெரிக்க விண்வெளி வீரர் ஒருவரும் டிராகன் ராக்கெட் மூலம் மார்ச் 18ம் தேதி மாலை பூமிக்கு திரும்புவார்கள்.
இந்த டிராகன் ராக்கெட் 18ம் தேதி மாலை 5.57 மணிக்கு பூமியை வந்தடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளிநிலையத்தில் இருக்கும் பணிகள் அனைத்தையும் புதிதாகச் சென்றுள்ள விண்வெளி வீரர்களிடம்முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.அதன்பின்புதான் பூமிக்கு சுனிதா, வில்மோர் புறப்படுவார்கள். இந்த வார இறுதியில் காலநிலை எதிர்பார்த்த அளவு சிறப்பாக இல்லாததால் விரைவாக பூமிக்கு திரும்புவார்கள். டிராகன் கேப்சுலில் நாசா விஞ்ஞானிகள் நிக் ஹாக், ரஷ்யாவின் அலெக்சான்ட்ரா கோர்பனோவ் ஆகியோரும் சுனிதா, வில்மோருடன் பூமிக்கு திரும்புவார்கள்” எனத் தெரிவித்துள்ளது.
நாசா விஞ்ஞானி பிராங் ரூபியா அதிகபட்சமாக நாசாவில் 371 நாட்கள் தங்கியிருந்தார். ஆனால் மிர் விண்வெளிநிலையத்தில் ரஷ்யாவின் வலேரி போல்யாக் தொடர்ந்து 437 நாட்கள் தங்கியிருத்தது சாதனையாக இருந்து வருகிறது.