ரிடையா்டுகளின் டம்மி பதவியான’ ஆளுநர் பதவிக்கு வந்து உட்கார்ந்து கொண்டு ‘ஆக்டிங் ஜனாதிபதி’யாக தங்களைக் கருதிக் கொள்ளும் ஆணவப் போக்குக் கொண்டவர்கள் அனைவர்க்கும் அணை போடும் தீர்ப்பைப் பெற்றுத் தந்துள்ளார் மாண்புமிகு முதலைமச்சர்.தமிழ்நாடு ஆளுநராக வந்தது முதல் ஆா்.என்.ரவி சட்டவிரோத – மக்கள் விரோத – ஜனநாயக விரோத – தமிழா் விரோத – தமிழ் விரோத – மனித விரோதச் செயல்களைத் தான் செய்து வருகிறார் என்பதை இந்நாடு அறியும். இதனை இப்போது உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.கோடிக்கணக்கான மக்களால் உருவாக்கப்பட்ட சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் ‘ஊறுகாய் பானைக்குள் போட்டு ஊற’ வைத்துவிட்டார் ரவி. இது பற்றிக் கேட்டால், ‘நான் கையெழுத்திடாமல் வைத்திருந்தாலே அது நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம்’ என்று ஆணவத்தோடு கொக்கரித்தார் ரவி. அதுவும் பள்ளி மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு தமிழ்நாடு அரசுக்குப் பதில் சொன்னாா்.
‘ஆளுநராக வந்துவிட்டதால் ஆளவந்ததாக அர்த்தம்’ அல்ல என்று உச்சந்தலையில் கொட்டி இருக்கிறது உச்சநீதிமன்றம். ‘ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் அனைத்தும் சட்ட விரோதம்’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவருக்கு உறைக்கும் படி சொல்லி இருக்கிறார்கள். அவரது தடித்த தோலுக்கு உறைக்குமா எனத் தெரியவில்லை.
2020-23 காலக்கட்டத்தில் 14 மசோதாக்கள் தமிழ்நாடு அரசால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் 2 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டு , 12 மசோதாக்களை மாநில அரசுக்கே திருப்பி அனுப்பி விட்டார் ஆளுநா் ரவி. இந்த மசோதாக்களை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி மாநில அரசு சார்பில் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டாவது முறையும் அனுப்பினால் ஒப்புதல் தர வேண்டும். உடளே ஆளுநர் அந்த 12 மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டார். அங்கு கிடப்பில் கிடக்கிறது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜே.பி.பா்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போதே நீதிபதிகள் கிடுக்குப் பிடி கேள்விகளைக் கேட்டாா்கள். ‘இந்தக் கேள்விகளுக்கு அரசியல் சட்டப்படி பதில் சொல்ல வேண்டும்’ என்று ஆளுநா் தரப்புக்கு அறிவுரையும் சொன்னாா்கள்.
‘இப்படி மசோதாக்களை முடக்கி வைத்தால் ஒரு மாநில அரசு எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்கள். அப்போதே ஆளுநர் திருந்தி இருக்க வேண்டும் அது அவரால் முடியாது என்பதால் மந்தமாகவே இருந்தார். இறுதித் தீர்ப்பில் ஆளுநா் மந்தநிலையை அகற்ற ஷாக் கொடுத்து விட்டார்கள் நீதிபதிகள்.
- சட்டமன்றத்தில் இருமுறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், குடியரசத் தலைவருக்கு அதனை அனுப்பி வைத்தது சட்டவிரோதம்.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் கண்டிப்பாக ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்.
- ஆளுநா் ஆர்.என் ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை.
- பொதுவான விதிப்படியும், மாநில அரசின் ஆலோசனையின் படியும் மட்டுமே ஆளுநர் செயல்படமுடியும்.
- மாநில அரசுக்கு ஆளுநர் வீண் தடைகளை ஏற்படுத்தக் கூடாது. அது மக்கள் நலன்களைப் பாதிக்கும் என்றும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.
- மாநில அரசுக்கு வழிகாட்டுபவராக ஆளுநர் இருக்க வேண் டுமே தவிர, அரசியல் எதிரி போல் செயல்படக் கூடாது.
- தன் விருப்பம் போல் ஆளுநர் செயல்பட முடியாது.
- தனக்கு சிறப்பு அதிகாரம் இருப்பதாகக் கருதுவது தவறு.
- ஆளுநர் தன்னிச்சையாகச் செயம்பட முடியாது.
- அரசின் செயல்பாடுகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று நீதியரசர்கள் மகத்தான தீர்ப்பை வழங்கினார்கள்.
“ஆளுநர் அரசியல் நோக்கத்துடன் வழிநடத்தப்படாமல், எடுத்துக் கொண்ட அரசமைப்பு உறுதிமொழியால் மட்டுமே வழிநடத்தப்பட வேண்டும். முரணாக அமையும் எந்த நடவடிக்கையும் அரசமைப்புப் படி எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறுவது ஆகும்” என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளார்கள். இதோடு நிறுத்தி இருந்தால் கூட இத்தீர்ப்பு அறிவுரைத் தீர்ப்பாக மட்டுமே அமைத்திருக்கும்.
ஆளுநரின் சட்டவிரோதச் செயல்பாட்டுக்கு – உச்சநீதிமன்றம் உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. 10 மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர் ஆர். என் ரவியின் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகிறது என்றும், இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவருக்கு அவர் மசோதாக்களை அனுப்பி வைத்தது செல்லாது என்றும் நீதிபதிகள் அறிவித்தனர். அரசியல் சாசனப் பிாிவு 142-இன் கீழ் உச்சநீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்றும், இந்த மசோதாக்கள் அனைத்தும் உடனே சட்டமாகி நடைமுறைக்கு வருவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த வகையில் இது மகத்தான தீர்ப்பாக அமைந்துவிட்டது.
இந்த விவகாரத்தை உச்சந்திமன்றத்துக்கு கொண்டு சென்று தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல – இந்தியாவுக்கே ஒரு மகத்தான தீர்ப்பை பெற்றுத் தந்துள்ளார் மாண்புமிகு முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இப்படித்தான் பல ஆளுநர்கள் உட்கார்ந்து கொண்டு குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ‘ரிடையா்டுகளின் டம்மி பதவியான’ ஆளுநர் பதவிக்கு வந்து உட்கார்ந்து கொண்டு ‘ஆக்டிங் ஜனாதிபதி’யாக தங்களைக் கருதிக் கொள்ளும் ஆணவப் போக்குக் கொண்டவர்கள் அனைவர்க்கும் அணை போடும் தீர்ப்பைப் பெற்றுத் தந்துள்ளார் மாண்புமிகு முதலைமச்சர் அவர்கள் சட்டவிரோத ஆளுநா் இனியுமா தமிழ்நாட்டில் இருக்கப் போகிறார்?
அரசு மருத்துவமனையில் திடீர் சர்ப்ரைஸ் விசிட் அடித்த அமைச்சர்