Homeசெய்திகள்தமிழ்நாடுஆவின் தீபாவளி சிறப்பு சலுகைகள் - ஒரு லட்சம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் தள்ளுபடி

ஆவின் தீபாவளி சிறப்பு சலுகைகள் – ஒரு லட்சம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் தள்ளுபடி

-

- Advertisement -

ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆவின் பால், இனிப்பு பொருட்களை கொள்முதல் செய்பவர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகளின் விற்பனைகள் தொடங்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில், இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை கலைக்கட்டியுள்ளது.

குறிப்பாக, 2022ம் ஆண்டு முதல் ஆவினில் சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் ஆவினில் இனிப்பு மற்றும் கார வகைகளை ஆடர் பெற்றுக் கொள்ளலாம் என ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்படும்

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக ஒரு லட்சம் மதிப்புள்ள ஆவின் பால் பொருட்களை கொள்முதல் செய்பவர்களுக்கு தள்ளுபடிகள் வழங்க ஆவின் நிறுவனம் திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.

தீபாவளி பண்டிகை காலங்களில் தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்து கூடுதல் விற்பனை செய்வது வழக்கம். அதேபோன்று ஆவின் நிறுவனமும் வியாபாரப் போட்டியில் இறங்கியுள்ளது.

MUST READ