அரசு பேருந்துகளில் கிரேட் 2 கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான போலீஸார் இலவசமாக பயணிக்கலாம் என்று மாநில உள்துறை அறிவித்துள்ளது. போலீஸார் இலவசமாக பயணிப்பது தொடர்பாக போக்குவரத்து, காவல்துறை இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இந்நிலையில் உள்துறை, போலீசுக்கு இலவச பஸ் பாஸ் அளிக்கவும், அதைவைத்து வருவாய் கோட்டத்தில் டவுன், புறநகர் பஸ்களில் இலவசமாக செல்லலாம் எனக் கூறியுள்ளது.