தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களின் டிக்கெட்கள் அனைத்தும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன.
இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.ரயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும்.அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பயணம் செய்வதற்கான இரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.ரயில்வே நிலைய கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.
பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரயிலில் பயணிக்க தென் மாவட்ட இரயில்களின் டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்திற்குள்ளாக விற்று தீர்ந்தன.
மதுரை,திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களுக்கான செல்லக்கூடிய. விரைவு இரயில்களான் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்,அனந்தபுரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ்,பொதிகை எக்ஸ்பிரஸ்,பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில்களில் டிக்கெட்கள் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்திற்குள்ளாக விற்று தீர்ந்து காத்திருப்பு பட்டியலுக்கு சென்றது.மேலும் மற்ற மாவட்டங்களுக்கு செல்ல கூடிய ரயில்களிலும் 10 நிமிடத்திற்குள் டிக்கெட் விற்று தீர்ந்தன.
ஜனவரி 13 ம் தேதி பயணத்திற்கு நாளை செப்டம்பர் 15 தேதி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்…கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க பயணிகள் விரைந்து முன்பதிவு செய்து கொள்ள ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கி இருக்கும் நிலையில் சிறப்பு ரயில் மற்றும் சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு அறிவிப்பு ன்னர் அறிவிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
அதிகாலையில் இருந்து நின்று கொண்டிருப்பதாகவும் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடத்தில் முழுவதுமாக விற்று தீர்ந்ததால் தற்போது காத்திருப்பு பட்டியலில் முன்பதிவு செய்திருப்பதாக பயணிகள் தெரிவித்தார்.