மானாமதுரையில் தங்கையின் திருமணத்தில் தங்கை ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேற்றி கொடுத்து ஒரு அண்ணன் வழங்கிய சீர்வரிசை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள். சுரேஷ்- செல்வி தம்பதியர். இவர்களின் மகளான விரேஸ்மாவிற்க்கு நேற்று மானாமதுரை தனியார் திருமண மகாலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் விரேஸ்மாவின் அண்ணன் ராயல் என்பவர், இவரும், விரேஸ்மாவும், சிறுவயது முதல் வீட்டில் பாசத்துடன் வளர்த்து வந்த ஜல்லிகட்டு காளை,சண்டை கிடா,கன்னி நாய்கள் சண்டை சேவல் ஆகியவற்றை அதிகமாக பாசத்துடன் வளர்த்து வந்தனர்.
தங்கைக்கு நடந்த திருமண மண்டபத்தில் தாங்கள் வளர்த்த ஜல்லிகட்டு காளை, சண்டை கிடா, கன்னி நாய்கள், சண்டை சேவல் ஆகியவற்றை மேடையேற்றி போட்டோ எடுத்து கொண்டும்,கன்னி நாய்கள்,சண்டை சேவல்களை சீதனமாக வழங்கியும் தங்கையின் ஆசைகளை நிறைவேற்றி தங்கையே வழி அனுப்பி வைத்தார்.
திருமண சீர்வரிசைகளில் ஜல்லிகட்டு காளை, சண்டை கிடா, சேவல் ஆகியவற்றை வழங்கியதுடன், அவற்றை திருமண மேடையில் ஏற்றி போட்டோ, வீடியோ எடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.