Homeசெய்திகள்தமிழ்நாடுதான் தோன்றித்தனமாக செயல்பட்ட ஆளுநருக்கு பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம் – தொல்.திருமாவளவன்

தான் தோன்றித்தனமாக செயல்பட்ட ஆளுநருக்கு பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம் – தொல்.திருமாவளவன்

-

- Advertisement -

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் பாடம் புகட்டி இருப்பதோடு, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தள்ளாா்.தான் தோன்றித்தனமாக செயல்பட்ட ஆளுநருக்கு பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம் – தொல்.திருமாவளவன்சென்னை சேப்பாக்கத்தில் வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்,  வக்பு திருத்த சட்டம் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது சிறுபான்மை சமூகங்களை அச்சுறுத்தும்  வகையில் உள்ளது. பாஜக அரசின் இந்த போக்கு ஒரு பாசிச போக்கு இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விசிக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகம் உள்ளிட்ட மசோதாக்கள் உள்ளிட்ட அனைத்தையும் கிடப்பில் போட்டு வைத்தார்.தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி குடியரசு தலைவருக்கு அதனை அனுப்பி வைக்கிறோம் என்று கால தாமதம் செய்தார் இன்னைக்கு உச்சநீதிமன்றம் அதனை கண்டித்து இருப்பதோடு இந்த சட்ட மசோதாக்களை ஏற்க்கிறோம் அதனை சட்டம் ஆக்குகிறோம் என்ற தீர்ப்பை அளித்துள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு புகட்டி இருக்கிற ஒரு பாடம் இது. சனாதன பின்புலத்தில் அரசியல் செய்யும் ஆளுநர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத பாடமாக அமையும். ஆர்எஸ்எஸ் சிந்தனைகளோடு செயல்படக்கூடிய அனைவருக்குமான ஒரு பாடம், இது ஒரு மூக்குடைப்பு என்றார். ஆளுநர் அவர் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் தட்டிக் கழித்தார், ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆனால் அவர் ஜனநாயகத்தையும் சட்டத்தையும் மதிக்கவில்லை. தான் பெற்ற சனாதன அரசியல் பின்புலத்தை உயர்வாக கருதுகிறார் தமிழ்நாட்டின் இருக்கும் திமுக அரசுக்கு நெருக்கடி தருவதாக நினைத்து அவர் தான் தோன்றித்தனமாக செயல்பட்டார் அதற்கு உச்சநீதிமன்றம் பாடம் புகட்டி உள்ளது.

ஒன்பதாம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்டி இருக்கிறார். அதில் கலந்து பேசி நீட் தேர்வு விளக்கு குறித்தான சட்டத்திற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து முடிவெடுப்போம். வஃக்பு வாரி சட்டத்தை திரும்ப வருவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் திருமாவளவன் கூறியுள்ளாா்.

தலையை பக்கவாட்டில் சாய்ந்தவாறு பணியில் ஈடுபட்ட இளைஞர் – முதல்வரின் அறிவிப்பால் மகிழ்ச்சி

MUST READ