சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணிக்காக, சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பிரபல நடிகர் அஜித் குமார் வீட்டின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது.
ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து!
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அக்கறை முதல் ஈஞ்சம்பாக்கம் வரை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நெடுஞ்சாலைத் துறை சார்பில் கிழக்கு கடற்கரைச் சாலை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் சிறிது தூரம் சாலை விரிவாக்கத்திற்காக, நீதிமன்ற உத்தரவின் பேரில், மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் தற்போது வசித்து வரும் ஈஞ்சம்பாக்கம் வீட்டின் முகப்பு வாயிலில் கேட் அமைந்துள்ள சுவர் இடிக்கப்பட்டு, சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பலரின் குடியிருப்புச் சுற்று சுவர்களும் இடிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றனர்.
பதுங்கியிருந்தவரை கைது செய்த தனிப்படைக் காவல்துறையினர்!
வடிகால் பணிகள் நிறைவடைந்ததும், சுற்றுச்சுவர் கட்டித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.