நாகை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஃபெங்கல் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக விவசாய நிலங்களை தண்ணீர் சூழ்ந்து கொண்டுள்ளது. மேலும், கடல் சீற்றம் காரணமாஒக ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.