Homeசெய்திகள்தமிழ்நாடுமின்னல் வேகத்தில் டோனி அடித்த ரெண்டு சிக்ஸர்கள்! பார்க்க செம த்ரில்!

மின்னல் வேகத்தில் டோனி அடித்த ரெண்டு சிக்ஸர்கள்! பார்க்க செம த்ரில்!

-

csk

சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் 16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆறாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் -லக்னோ சூப்பர் ஜெயம்ச்சும் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது சென்னை அணி.

c

218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடின இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. ஆனால், 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. லீக் சுற்றின் தனது முதல் வெற்றியை பதிவு செய்வது.

u

இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்ன ஒரு சிறப்பான ஆட்டம். மின்னல் வேகத்தில் டோனி அடித்த ரெண்டு சிக்ஸர்கள் பார்க்க செம த்ரில்லாக இருந்தது. இதே முனைப்புடன் விளையாடி சென்னை அணி இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்ற விரும்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

MUST READ