முரசொலி செல்வம் மறைவு – பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தங்கை கணவரும், முரசொலி மாறன் அவர்களின் சகோதரரும், முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான, முரசொலி செல்வம் அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்.
முரசொலி செல்வம் அவர்கள் குடும்பத்தினருக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாடு பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முரசொலி செல்வம் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.